Sunday, December 19, 2010

தேசிய ஒற்றுமை

இதயப் பூர்வமான தேச பக்தியை இப்பொழுது
இது போன்ற கவிதைகளிலும்
இல்லாததை இருப்பது போல் பேசும்
இதய மற்ற அரசியல்வாதிகளின் பேச்சிலும் தான் காண முடிகிறது

உண்மையை உரக்க மிட்டு கூறுகிறேன்
உன்னத தேச பக்தி பலருக்கும் இல்லையென வாடுகிறேன்..

நம்மிடம் வேண்டும் பல மாற்றம்
இல்லையெனில் கிடைக்கும் எமாற்றம்…

பொருளாதாரத்தில் மட்டும் வளர்ந்தால் போதாது
தீவிரவாதம் இருந்தால் நிம்மதி என்பது ஏது?

ஆம்
நாம் ஒன்று படுவதை தவிர வேறு வழியில்லை
வென்று விடுவதை தவிர வேறு நோக்கமில்லை

நாடு நலம் பெற
நல்ல பல திட்டங்களை
நடைமுறை படுத்த
நல்லவன் நாடள வேண்டும்

பலவீனத்தின் உதாரணமான
ஈர் குச்சியை ஒன்று சேர்த்தால் கூட
ஊரை தூய்மையாக்கும்

இரும்பு மனம் கொண்ட
இந்தியர்கள் ஒன்று சேர்ந்தால்
இமயத்தை இட மாற்றலாம்
இந்திய பெருங்ககடலை இல்லாமல் செய்யலாம்

இந்தியா வல்லரசாக!

நாம் ஒன்று படுவதை தவிர வேறு வழியில்லை
வென்று விடுவதை தவிர வேறு நோக்கமில்லை

No comments:

Post a Comment