Sunday, December 19, 2010

காதல் நாத்திகன்

காதல் நாத்திகன் நானே –
உன்னை கண்டதும் கவிழ்ந்தேன் தானே

இல்லாத கடவுள் போல பொய்யான காதல் என்று பேசி வந்தேன்
பொல்லாத பார்வை பார்த்து அழகான அன்பை வீசிச் சென்றாய்

நீயும் நீயும் எங்கே எங்கே கேட்கிறதே கொலுசு சத்தம்
உதட்டோடு வேண்டாம் அன்பே உயிரோடு வேண்டும்

முத்தம் பார்க்காமல் சென்றாய் நீயே பிடிக்கிறதே பித்தம் பித்தம்
உன்னை காண துடிக்கிறதே என் கண்கள் நித்தம் நித்தம்

நெருப்போடு நீரும் சேர்ந்து நீராவி ஆவது போல
வெறுப்போடு சோகம் சேர்ந்து என் ஆவி போகிறதே

கொடுமை கொடுமை காதல் கொடுமை
வெறுமை வெறுமை எல்லாம் வெறுமை

கடும் தவம் செய்தேனே கடவுளும் வந்தாரே
உன் காதலை கேட்டதும் காணாமல் சென்றாரே

உயிருந்தும் வாழாமல் வழியிருந்தும் சாகாமல்
பொய் வாழ்க்கை என்னோடு போராட்டம் உன்னோடு!

No comments:

Post a Comment