ஓர பார்வையிலே ஓராயிரம் அர்த்தம் சொல்லி
ஒன்றுமே புரியாதது போலே நீயும் போவது எங்கே
கந்தக பார்வையில் என்னை எரித்து விட்டு
காணாதது போலே நீயும் போவது எங்கே
திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் மந்திர அழகே!
இரும்பு இதயம் வேண்டுமடி உன்னை நினைக்காமல் இருக்க!
நாருடன் சேர்ந்த பூவாய் சேர்ந்து இருப்பாய் என்று இருந்தேன்
வேருடன் என்னை பிடுங்கி வீசி விட்டு நீயும் செல்வது எங்கே
யாரும் கற்று தரவில்லை சுவாசிக்க
அது போலவே உன்னை நேசிக்கவும்
உயிர் வாழ இயலாது
இப்போது என்னால் சுவாசமும் உன் நேசமும் இல்லாமல்
மண்ணோடு சங்கமமாகும் மழையை போலே
மனதோடு இருப்பாயென நினைத்திருந்தேன்
அலையாய் என்னை தொட்டு விட்டு
அன்பே நீயும் போவது எங்கே
No comments:
Post a Comment