காலம்
உருண்டோடி கொண்டே இருக்கிறது , ஆம் எந்த
ஒரு சிறப்பு நிகழ்வுகள் இல்லாமல் .... இறுதியாண்டு படிப்பில்
பாதி முடிந்து விட்டது.. ரோகினியுடன் நட்பு இன்னும் ஆழமாய், நண்பர்களின் கேலி கிண்டல்களுக்கு நடுவில் காதல் கலப்படம்
இல்லாத நட்பாய் தொடர்ந்து கொண்டிருந்தது...
மற்றும் ஒரு நாள்
கேண்டீனில்...
சார் ரொம்ப பிஸி
யா... ?
தெரிந்த குரலாக
இருக்கிறதே என்று திரும்பி பார்க்க வேண்டியதில்லை. கண்டிப்பாக அது ரோகினிதான் ...
அவளே முன்னால் வந்தாள்...
நான் எழுதி
கொண்டிருந்ததை கண்டு......
சாரி கேம்பஸ்
இண்டர்வியூக்கு ப்ரிப்பரேசனா ? நான் வாங்கி வைத்த சமோசவில் ஒரு பாதியை எடுத்து சாப்பிட்டு கொண்டே கேட்டாள்
பேப்பரை அவளிடம்
நீட்டினேன்...
"சலவை செய்த சூரியனின் புதல்வி
என் தலை எழுத்தை
மாற்றும் தலைவி
என் இதயம் முழுவதும் காதல்
பரவி - நீ
இல்லையில்லை என்றால்
நான் ஆவேன் துறவி
"
மெதுவாக பேப்பரை மேசையின் மீது வைத்து விட்டு என்னை
பார்த்தாள்.
எப்படி இருக்கு
“சமோசா நல்ல
இருக்கு”
சொல்லி கொண்டே இன்னொரு பாதியை
எடுக்க கையை நீட்டினாள் , கொய்யால
கொன்னுருவேன்... கவிதை எப்புடி
இருக்குனு சொல்லு.
என் பேச்சை
செவி கொடுக்காமல் , இன்னொரு
பாதி சமோசாவை ஆக்கிரமிப்பு செய்தாள்.
அவளுடை
பர்சில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து கொடுத்தாள்.
“நித்தம் நித்தம்
வேண்டும் உன் கொலுசின் சத்தம் -
காது கொடுத்து
கேட்டுபார்
உன் பேர் சொல்லும்
என் இதய சத்தம் “
நா
எழுதுனதே கொஞ்சம் மொக்கையா இருந்துச்சுனு இருந்தா இது அத விட இருக்கே ,( "நீ கவிஞண்டா " எனக்குள்
இருக்கும் நல்லவன் என்னிடம் சொன்னான் )
சரி இது
என்ன , நீயும் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டியா ?
இல்ல என் கிளாஸ்
ராஜேஷ் எனக்கு கொடுத்தான் கொஞ்சம் காமெடி ஆ இருந்துச்சு , உன்கிட்ட காமிக்க்கலாம்னு வந்தா.. டிஷு
பேப்பரில் வாயை துடைத்து
கொண்டே சொன்னாள்.
சரி நீ
யாருக்கு எழுதிட்டு இருக்க ?
ஹ்ம்ம்ம் , பிரின்சி மேம் க்கு !!!
தண்ணீரை வாய்க்குள் வைத்துக் கொண்டே சிரிக்க ஆரம்பித்தாள்.. தண்ணீர்
முழுவதும் முழுங்கி விட்டு வாய் விட்டு சிறிது கொண்டே... பார்த்து அவங்க பையனுக்கு தெரிய
போகுது... உன்ன உண்டு இல்லைன்னு பண்ணிருவான் ...
சே
எப்புடித்தா இந்த மொக்கை ஜோக்கு எல்லா விழுந்து விழுந்து சிரிக்கிறாங்களோ....
“சரி நீ ராஜேஷ் க்கு என்ன சொல்ல போற “.....
என்ன லூசுதனமா
கேக்குற நா அவகிட்ட என்ன சொல்லணும்.. சரி டைம்
ஆயிருச்சு கெளம்பலாம் ...
ஹலோ!!!!
என் கேள்விக்கு பதில் சொல்லு!!!!
என்னை
அறியாமல் என் சத்தம் அதிகமானது.... அதை உணர்ந்து கொண்டு .. சாரி என்றேன்.
ஒன்னும்
பிரச்சினை இல்ல வருங்கால வைரமுத்து சார் நாளைக்கு
பாக்கலாம்!!!
கிளம்பி
சென்று கொண்டிருந்தாள் ....
சே!!! ந என்ன கேட்ட அவ
என்ன பதில் சொல்லிட்டு போறா...
சிவப்பு ரோஜாக்கள் பட டைலாக் தான் இப்ப நினைவுக்கு வந்தது....
நல்ல நடை .. விருவிருப்பு.. பாராட்டுக்கள்…தொடருங்கள்
ReplyDeleteமிக்க நன்றி சரவணன் :)
ReplyDeleteமிக அருமையான நடை அருமைப் பதிவு வாழ்த்துகள்
ReplyDelete