Wednesday, December 14, 2011

வெகு தொலைவில் காதல்…VTK 1



நான் நினைபதெல்லாம் ஒரு கோடு போல, நடப்பது எல்லாம் இன்னொரு கோடு இரண்டும் என்றும் இணையாத இணை கோடுகள். இறந்து கொண்டிருக்கும் நம்பிக்கையை இறுக்கி பிடித்து கொண்டு , மிக தூரத்தில் ஓடி கொண்டிருக்கும் என் வாழ்க்கையை துரத்தி கொண்டு, ரணமான பயணம். சிறு இடைவெளிக்கு பிறகு இளைப்பாறுகிறேன் என் தமிழ் அன்னையின் மடியில் .

வெகு தொலைவில் காதல்….

கசப்பான உண்மை நிகழ்வுகளுடன் கற்பனை இனிப்புடன் கலந்த கலவை. தொடர் கதை எழுத என் முதல் முயற்சி.

சிறு வயதில் சத்தம் போட்டு கொண்டு வரும் சோன்பப்டி காரன் மனதை சலன படுத்துவான், தாத்தாவிடம் 20 பைசா வாங்கி கொண்டு ஓடி போவதற்குள் கடைசி பொட்டலத்தை வேறு ஒருவனுக்கு கொடுத்து விட்டு என்னை சட்டை செய்யாமல் மிதி வண்டியை மிதிக்க தயாராவான். (சோன்பப்டி போச்சே!!! ) கோவம் கலந்த ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் இப்பொழுதும் நடக்கின்றன வேறு விதமாய்


நான் சதீஷ் , சொல்லி கொள்ளும்படி பெரிதாக ஒன்றும் இல்லை, ஒரு அரியரை இரண்டு முறை எழுதி இறுதியாக முடித்து விட்ட சந்தோஷத்தில் திரியும் மூன்றாமாண்டு கல்லூரி மாணவன்..
என்றைக்கும் மாறாக அன்று கொஞ்சம் சீக்கிரமாகவே கல்லூரிக்கு சென்று விட்டேன். வராண்டாவில் யாரும் இல்லை ,
ஹாய் சதீஷ் குட் மார்னிங்
வெண்ணிலா ஐஸ்கிரீமுடன் பைவ்ஸ்டார் சாக்லேட் சேர்த்து சாப்பிட்டது போல இனிப்பான குரல். திரும்பி பார்த்தேன் . ரோகினி . தேவதை போல நின்றிருந்தாள்.
ரோகினி -என் ஜூனியர் , கவர்ந்திழுக்கும் முகம் இல்லை இருந்தாலும் எதோ ஒரு ஈர்ப்பு விசை அவளிடம் உள்ளது. மிக சிறந்த பாடகி .
ம்ம் குட் மார்னிங் ரோகினி ” .
என் அக்கா பையன் , அருகில் இருந்திருந்தால் கூட அசடு வழியாத மாமான்னு சொல்லிருப்பான்
அரை மப்பில் இருந்தவன் முகத்தில் சோடா தெளித்து போல திடீரென சுதாகரித்து கொண்டேன்.
ரோகினி: உங்ககிட்ட DSP புக் இருக்கா? சாரி என்னோடது மிஸ் ஆயிருச்சு.
ஒரு வேலை நான் DSP ல அரியர்ஸ் வச்சது தெருஞ்சுகிட்டே கிண்டல் செய்யுராளா ? சரி சமாளிப்போம் .
நாளைக்கு எடுத்துட்ட வந்தா பரவா இல்லையா ?
ரோகினி: ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சதீஷ் , நீங்க தப்ப நினைக்கலான உங்க போன் நம்பர் சொல்றீங்களா , காலையில உங்களுக்கு ஞாபகபடுத்துறேன்.
பரவாயில்லை ரோகினி, நம்பரை கொடுத்தேன். மறுபடியும் அதே இடத்தில என் அக்கா பையன் இருந்திருதால் அதையே தான் சொல்லி இருப்பான்.
மறுநாள் காலை ஒரு குட் மார்னிங் மெசேஜ் அப்புறம் ரிமைண்டர் மெசேஜ் நானும் ரிப்ளை பண்ணி மறவாமல் புத்தகத்தை அவளிடம் கொடுத்தேன்.
தினம் தினம் தொடர்ந்தது தகவல் (?) பரிமாற்றம் குறுந்தகவலில் …..
நினைத்திருக்கவில்லை என் வாழ்வில் அவள் இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவாள் என்று
**********.
பயணம் தொடரும்…..

No comments:

Post a Comment