Wednesday, April 20, 2011

புதிய பாதை

மின்சாரம் பாய்ந்தது போல உள்ளூர எதோ வலி

விளக்கமாய் விவரித்தும் விரியவில்லை என் வாழ்க்கை வானம்

பிரிவுகள் பிரியாமல் என் நிழலாக

பூக்களின் மரணம் வாசனை திரவியமாய்

என் எதிர்பார்ப்புகளின் மரணமோ கல்லறை காவியமாய்

சுவடு மட்டும் இங்கு உண்டு

என் தோல்விகளை மற்றவர்களுக்கு உணர்த்த…

சுமையான வேதனைகளுடன்

அகலாத நினைவுகளுடன்

கலைந்த கனவுகளுடன்

மிச்சம் இருக்கும் நம்பிக்கை துளிகள் என் உயிர் ஓட்டத்தின் ஆதாரம்

முடித்த போன நாடகத்தில் முதல் காட்சியை எதிபார்த்து காத்திருந்த

முட்டாள் நான்

முழுப்பொறுப்பேற்று கொள்கிறேன்

தடுமாறி விழுந்த பின் தடைபடாது என் பயணம்

மறக்க முடியாத நினைவுகளை மறைத்து கொண்டு

இதோ தயாராகிவிட்டேன்

என் பயணத்தை தொடர வேறு பாதையில்